ஆரம்பப் பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 2021 ஜனவரி 11ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் முன்பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலதிக அறிவிப்பு வரும் வரை மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.

மற்ற அனைத்து பாடசாலைகளும் கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் திறக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post