பிரான்ஸ் போர்தோ நகரில் காஸ் வெடிப்பு! பலர் காயம்!! ஒருவரைக் காணவில்லை!!! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
போர்தோ நகரின் மத்தியில் இன்று காலை கேட்ட பெரும் வெடியோசை பலரையும் படுக்கையில் இருந்து எழுந்தோட வைத்துள்ளது.என்ன நடந்தது என்பது தெரியாமல் பலரும் தெருவுக்கு ஓடினர். 

பிரான்ஸின் தென் மேற்குத் துறைமுக நகரமான போர்தோவில் (Bordeaux) குடியிருப்பு நெரிசல் மிகுந்த பகுதியில் கட்டடம் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அதனால் எழுந்த ஓசை நகரை உலுக்கியது.
 
சமையல் எரிவாயுவுடன் தொடர்புபட்ட வெடிப்புச் சம்பவம் அது என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவித்தன.
 
எரிவாயு விநியோக இணைப்பிலா அல்லது வேறு தனிநபரது தவறினாலா வெடிப்பு நிகழ்ந்தது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.அந்தப் பகுதியில் கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் சிதறின. கூரைகள் பறந்தன. 

89 வயதான ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். வேறு பத்துப்பேர் வரை சிறு காயங்களுக்கு இலக்காகினர். வாகனத் திருத்துனர் ஒருவரைக்  காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர் வெடிப்புச் சம்பவம் நடந்த வாகனத் தரிப்பிடத்தில் காணப்பட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

வெடிப்பின் அதிர்வினால் அயலில் கட்டடங்கள் இடிந்து விழக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருப்பதால் பலர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.Previous Post Next Post