கிளிநொச்சியில் கர்ப்பிணிப் பெண் கொலை! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி - அம்பாள் குளத்தில் கடந்த 9ஆம் திகதி பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக உடல்கூற்று பரிசோதனைமுடிவுகள் தெரிவிக்கின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண்  37 வயதான காமராஜ் திலகேஸ்வரி எனவும் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததாகவும், 3 வயது குழந்தை ஒன்றும் இருப்பதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதன் முடிவின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும்,
பெண் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து கொலை செய்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post