யாழ்.செம்மணி சுடலையில் ஆபத்தான வெடி மருந்துப் பொதி! இராணுவம் குவிப்பு!! (படங்கள்)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் அபாத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது.

இன்று அதிகாலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post