யாழ். சுன்னாகத்தில் தோட்டக் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு! (படங்கள்)


சுன்னாகம் குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த இராசதுரை சுதாகரன் (வயது 36) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் சில தினங்களுக்கு முன்னரே அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post