மாங்குளத்தில் சிறுவன் ஒருவரைக் காணவில்லை! கடத்தப்பட்டதாகச் சந்தேகம்!!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் கடந்த இரவு முதல் 14 வயதுடைய சிறுவன் ஒருவரைக் காணவில்லை என்று பெற்றோரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாது,

கடந்த இரவு 7.30 மாங்குளம் துணுக்காய் வீதியில் உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் என்ற சிறுவன் அயலில் உள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் வீடு வந்து சவற்காரம் எடுத்துச் சென்றுள்ளார்.

அவர் நீண்டநேரமாக வீடு திரும்பாத நிலையில் அவரை பெற்றோர் தேடிச் சென்றிருக்கின்றனர்.

கிணற்றடியில் அவர் கொண்டு சென்ற உடைகள் காணப்பட்டிருக்கின்றன.

பெற்றோர் அயலவர்களின் துணையுடன் தேடுதல் மேற்கொண்ட நிலையில் கிணற்றுக்குள்ளும் தேடியிருக்கின்றனர். அங்கும் சிறுவன் இல்லை.

இதனிடையே அவர்களின் வீட்டின் முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் அவர் கொண்டு சென்ற சவற்காரம் காணப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் அவர் கடத்தப்பட்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த மாணவனை கண்டவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புக்கு - 0770871475

Previous Post Next Post