யாழ். ஆலயம் ஒன்றின் முன் நடந்த வாள்வெட்டு! திகில் காட்சிகள்!! (சிசிரிவி வீடியோ)


யாழ்ப்பாணம் -சித்தங்கேணி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி சிவன் ஆலய வளாகத்தில் இன்று(11 )வைத்து, அந்த ஆலய நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கும் வேறு ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த வேறு ஒரு நபர் கோவிலின் நிர்வாகத்தில் உள்ள ஒருவரை வாளால் வெட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது வாள் கீழே விழுந்ததையடுத்து அந்த வாள் மீட்கப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வாள் வெட்டினை மேற்கொண்டவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் எனவும் கோவில் தகராறு காரணமாகவே வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
Previous Post Next Post