யாழில் மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!


மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி வடக்கில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் இடம்பெற்றது என்று நெல்லியடி பொலிஸார் கூறினர்.

சம்பவத்தில் துன்னாலை ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

வீட்டு கூரை வேலையில் ஈடுபட்டிருந்த போது தகரம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post