வெளிநாடொன்றில் இலங்கையர் ஒருவர் சுட்டுக்கொலை!


டோஹாவின் அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் பாதுகாவலராக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கட்டாரை சேர்ந்த இளைஞன் ஒருவர், தனது பெண் நண்பியுடன் அந்த வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது அவரை தடுதது நிறுத்திய இலங்கையரான பாதுகாவலர், அந்த இளைஞனின்அடையாள அட்டையை கோரியுள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு சென்ற கட்டார் இளைஞன், சற்று தாமதமாக வந்து இலங்கையரான பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இலங்கையர் கொல்லலப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் சந்தேகநபர் அவர்கள் மீது பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , குறித்த துப்பாக்கிதாரியை பொலிசார் கைது செய்தனர்.

அதேவேளை தாக்குதல் நடத்த பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் இல்லாதது என்றும், அந்த ஆயுதத்தை அவர் எவ்வாறு பெற்றார் என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவித்தனர்.

இறந்த பாதுகாப்புக் காவலரான இலங்கையர் மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது. அவரது ஒப்பந்தம் முடிவடைவதால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை திரும்பவிருந்த நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த வார தொடக்கத்தில், உலகம் முழுவதும் மொத்தம் 459 நகரங்களை உள்ளடக்கிய “Crime Index by City 2022” அறிக்கையின்படி, கத்தார் தலைநகர் அபுதாபிக்குப் பிறகு உலகளவில் இரண்டாவது பாதுகாப்பான நகரமாக டோஹா தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post