நீர் வீழ்ச்சியில் மூழ்கிய யாழ். பெண்ணின் சடலம் மீட்பு!

 ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தைக்கு சென்றவர்கள், கடந்த வியாழக்கிழமை உறவினர்களுடன் எல்ல நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்றனர்.

தீடிரென பெய்த கடும் மழையினால் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் நீராடிக் கொண்டிருந்த ஆறு நபர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும் அந்தப் பகுதி மக்களால் மூன்று பேர் காப்பாற்றப்பட்டனர்.

ஒரு பெண்ணும் இரண்டு சிறுமிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்த சிறுமி 16 வயதுடைய எட்மன் ஜேவதாஸ் உஷாரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் காணாமல் போன இருவரும் நேற்று முன்தினம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறையைச் சேர்ந்த 14 வயதான எட்மன் ஜேவதாஸ் மிதுர்ஷா மற்றும் 29 வயதான வேவனி ஜேசுதாஸ் ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post