நீர் வீழ்ச்சியில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரிகள் உள்ளிட்ட மூவர் மாயம்! 16 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு!!


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடிய வேளை காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

இரண்டு சகோதரிகளும், உறவினரான பெண் ஒருவருமே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நீரில் அடித்துச் சென்று காணாமல் போனவர்களில், 16 வயதான சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் நீரில் அடித்து சென்ற நிலையில், மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

14, 16 வயதுகளையுடைய சிறுமிகள் இருவர் மற்றும் 29 வயதுடைய இளம் பெண் ஆகியோரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெள்ளவத்தை வந்த நிலையிலேயே, இந்த குழுவினர், அவிசாவளை நோக்கி பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Previous Post Next Post