சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த குடும்பத்திடம் நகைகள் கொள்ளை!


சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த குடும்பத்தின் 60 பவுண் நகை மற்றும் விலையுயர்ந்த புடவைகள் திருட்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுவிஸிலிருந்து அண்மையில் விடுமுறையில் வந்து குடும்பம் ஒன்று குறித்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இந் நிலையில் நேற்றைய தினம் வீட்டுக்காரர்களும் சுவிஸ் குடும்பமும் வெளியில் சென்றிருந்த நிலையிலேயே இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் புடவைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post