குழந்தை பெற்ற 16 வயதுச் சிறுமி! நிதி நிறுவன முகாமையாளர் சிக்கினார்!!

16 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பவதியாக்கிய குற்றத்திற்காக நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் மட்டக்களப்பு களுவாங்கேணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த 16 வயதான யுவதி கடந்த வருடம் மட்டக்களப்பு- திருகோணமலை வீதியில் இயங்கிவரும் நுண்கடன் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் முகாமையாளராகக் கடமையாற்றுபவர் இவ் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த யுவதி குழந்தை ஒன்றைப் பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த யுவதி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நுண்கடன் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந் நிலையிலேயே மேற்படி முகாமையாளரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous Post Next Post