தாய் கண்டித்ததால் 16 வயதுச் சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை!

திருகோணமலை - சம்பூர் பகுதியில் 16 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பவிசாலினி (16 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. தனது தாய் திட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த சிறுமி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறுமி தூக்கில் தொங்குவதை கண்டு உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்பொழுது மூதூர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post