
74 வயதுடைய முத்துலிங்கம் புவனேஸ்வரி மற்றும் 73 வயதுடைய சுப்பிரமணியம் பாலசுந்தரம் ஆகிய இருவருமே இவ்வாறு சட*லங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டபோது, ஆண் வீட்டுக்கு வெளியே உயி*ரிழந்த நிலையில் காணப்பட்டதுடன், பெண் வீட்டுக்குள் உயி*ரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
பெண்ணின் ச*டலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதுடன், ஆண் உயி*ரிழந்து சுமார் 48 மணித்தியாலங்கள் கடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவருடன் மாற்றுத்திறனாளிப் பெண்ணொருவரும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பதிவுப் பணிகளுக்காக அந்த வீட்டுக்குச் சென்ற கிராம சேவகர், குறித்த இருவரையும் விசாரித்தபோது, அவர்கள் வீட்டுக்குள் உறங்குவதாக மாற்றுத்திறனாளிப் பெண் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இருவரினதும் சட*லங்கள் உட*ற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன.