கடனாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள ஈழத் தமிழ் இளைஞன்!

கனடாவில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் நாளையதினம் நாடு கடத்தப்படவுள்ளார். லக்சிகன் புனிதராசா என்பவரையே கனடா அரசு நாடுகடத்த உத்தேசித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் நாடுகட்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளைய தினம் நாடு கடத்தப்படவுள்ளீர்கள் என இன்று அதாவது நாடு கடத்த ஆறு மணிநேரம் இருக்கும் நிலையில் கனடா எல்லைச் சேவைகள் நிறுவனம் அவருக்கு அறிவித்தல் அனுப்பியுள்ளது.

அத்துடன் அவர் நாடு கடத்தப்படுவதை எளிதாக்கும் வகையில் வான்கூவர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post