யாழில் 13 வய*தில் கா*தல்! வீட்டை விட்டு ஓடிப் போகும் போது துரத்திப்பிடிப்பு!!

யாழ்ப்பாணத்தில் 13 வ*யதுச் சி*றுமியும் அதே வயதுடைய சி*றுவனும் காத*லித்து வீட்டை விட்டுத் தப்பியோடிய போது, கோப்பாய்ப் பகுதியில் வைத்துச் சிறு*மியின் உறவினர்களால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த மாணவர்களான சிறு*வனும் சிறு*மியும் காத*லித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறு*வனின் பெற்றோருக்கு அவன் கற்று வந்த கல்வி நிலையத்தால் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த சிறு*வனை அவனது பெற்றோர் அக்கல்வி நிலையத்திற்கு அனுப்பாது நிறுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், தனது சித்தியின் தொலைபேசி ஊடாகச் சி*றுவன் அந்த மாண*வியை பல தடவைகள் தொடர்பு கொண்டு வந்துள்ளான். இதன் தொடர்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிறு*மியின் பெற்றோர் கோவிலுக்குச் சென்ற போது, அம்மம்மாவுடன் தனித்திருந்த சிறு*மியைத் தனது சித்தியின் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சிறு*வன் ஓடித் தப்பியுள்ளான்.

பெரிய பயணப் பையுடன் சிறு*வன் ஒருவனின் மோட்டார் சைக்கிளில் தனது பேரப்பிள்ளை ஏறிச் செல்வதை அவதானித்த சிறு*மியின் அம்மம்மா, அங்கிருந்து கூக்குரலிட்டுக் கத்தியுள்ளார். இதனை அவதானித்த அயலவர்கள் மோட்டார் சைக்கிளைத் துரத்தத் தொடங்கியுள்ளனர்.

துரத்திச் சென்ற வேளையில், கோப்பாய் சந்திப் பகுதியில் உள்ள சமிக்ஞை விளக்கில் (Signal) நிற்காது சி*றுவன் சென்ற போது மயிரிழையில் விபத்து ஏற்படாமல் தப்பி, கைதடிப் பக்கமாக ஓடத் தொடங்கியுள்ளனர். அதன் பின்னர் கோப்பாய்ப் பாலத்திற்கு அருகில் இருவரும் வழிமறிக்கப்பட்டனர்.

சிறு*மியின் உறவினர்களால் சிறு*வன் தாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சிறு*வனும் சிறு*மியும் ‘ஹயஸ்’ (Hiace) வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டு, உரும்பிராயில் உள்ள சிறு*மியின் உறவினர் வீட்டில் சிறு*வன் அடைத்து வைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில், தகவல் அறிந்து அவ்விடத்திற்கு வந்த சிறு*வனின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் அங்கு மோதல் நிலை தோன்றியுள்ளது. இதன் பின்னர், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திச் சிறு*வனை அங்கிருந்து அவனது பெற்றோர் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகிறது.

அத்துடன் சிறு*வனின் பொக்கற்றில் இருந்து 40 ஆயிரம் ரூபா பணமும் தாயாரின் சில நகைகளும் மீட்கப்பட்டதாகவும் அவற்றையும் சிறு*வனின் உறவுகளிடம் திருப்பி கொடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கொடிகாமம் பகுதியில் உள்ள சிறு*வனின் தந்தையின் சிறியதாய் வீட்டுக்கு செல்ல இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்த மூதாட்டி மாற்றத் திறனாளி எனவும் தெரியவருகின்றது.

சிறு*வனின் பெற்றோர் அரச ஊழியர்கள் எனவும் சிறு*மியின் தந்தை வர்த்தகர் எனவும் தெரியவருகின்றது. இதே வேளை சிறு*வன் யாழ்நகரப்பகுதி ஒன்றில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் எனவும் சிறு*மி வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை மாணவி எனவும் தெரியவருகின்றது.

13 வய*துச் சி*றுமி மற்றும் சிறு*வனின் துணிச்சலான இச் செய்கை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post