யாழ்.அத்தியடி பிள்ளையார் ஆலய சதுர்த்திப் பூஜையில் கலந்து கொண்ட 19 பேர் கைது!

ஊரடங்கு வேளையில் கோவில் வழிபாடு ஒன்றில் பங்குகொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாள் உயர் அதிகாரி உட்பட்ட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் அத்தியடிப் பிள்ளையார் கோவிலில் சதுர்த்தி விரத பூசை நடைபெற்றுள்ளது. இதன் போது பூசகர் உட்பட்ட 19 பேர் பங்குகொண்டிருந்தனர்.  அவ்வேளை அங்கு பேருந்தில் சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

119 என்ற பொலிஸ் முறைப்பாட்டு இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்களை தனிமைப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்தப் பகுதி சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மதவழிபாட்டு தலங்களில் ஒன்றுகூட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post