நாளை யாழ். திருநெல்வேலிச் சந்தை இயங்காது!

யாழ்ப்பாணத்தில் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட திருநெல்வேலிப் பொதுச் சந்தையானது சந்தைக் கட்டடத்தில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடாக சபை எல்லைக்குட்பட்ட வீதிகளின் ஓரங்களில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெ.கிரிதரன் அறிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என்றும், உங்களுடைய ஆரோக்கியம் உங்கள் கையிலேயே தங்கியுள்ளது என்பதுடன், உங்கள் மீது நீங்கள் அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post Next Post