பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை! தண்ணீரில் கொரோனா வைரஸ் அறிகுறி!!

கொரோனா வைரஸின் அறிகுறி பரிசின் தண்ணீரில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குடிதண்ணீரில் இல்லாவிட்டாலும், முக்கியமாக வீதிகள் கழுவுவதற்குப் பாவிக்கும் தண்ணீர், அழகு நீர்த் தொட்டிகள், போன்றவற்றில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசின் 27 நீர் வழங்கல் தேக்கங்களில், கடந்த 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட சோதனைகளில், 4 இடங்களில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக குடிதண்ணீர் அல்லாத வேறு தண்ணீரை உபயோகிப்பதை மாநகரசபை தடைசெய்துள்ளது. குடி தண்ணீர் வேறு வழங்கல் மையங்களிலும் வேறு நீர்த் தேக்கங்களில் இருந்தும் வருவதால் ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குடிதண்ணீரைக் கூட கொதிக்க வைத்து அதன் பின்னர் பருகுவது சாலச் சிறந்தது.

இன்னமும் இந்த நீரிலும் வைரஸ் உள்ளதா என்பது தெரிவிக்கப்படாவிட்டாலும், கொத்திக்க வைத்த தண்ணீரை அனைவரும் அருந்துவது பாதுகாப்பானது.
Previous Post Next Post