லண்டனில் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் கொரோனாவுக்குப் பலி!

லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தான் நடாத்தும் அங்காடி ஊடாக லண்டனில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தன்னாலான உதவிகளைச் செய்த குறித்த பெண், அதே வைரஸினால் உயிரிழந்துள்ளமை புலம்பெயர் தேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் வன்னிப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை இவர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post