கணவனின் தாக்குதலில் அலறும் முல்லைத்தீவு இளம் பெண்! காணொளி மூலம் காப்பாற்றுமாறு கண்ணீருடன் உதவி கோரல்!! (வீடியோ)

முல்லைத்தீவிலிருந்து திருமணம் செய்து இரத்தினபுரி இறம்புக்கந்தை தோட்டத்துக்கு சென்ற இளம் பெண் அங்கு தான் சித்திரவதைப்படுவதாகவும், தாக்கப்படுவதாகவும் தெரிவித்து காணொளி ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அதில் தனது கணவன் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து தன்னைச் சித்திரவதை செய்வதாகவும், அப் பகுதி பொலிஸ் நிலையத்திற்குப் பல முறை சென்றும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்னை தனது பிள்ளையையும் மீட்டுத் தன் தாயாருடன் சேர்த்து வைக்குமாறு அவர் தனது காணொளியில் கேட்டுள்ளார். எனவே இது விடயம் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சென்று சேரும் வரை அனைவரும் பகிர்ந்து அப் பெண்ணையும் அவரது குழந்தையையும் மீட்க உதவி செய்யுங்கள்.
Previous Post Next Post