கனடாவில் உதவி செய்யச் சென்று உயிரிழந்த யாழ்ப்பாணத் தமிழர்!

கனடாவில் ஏற்பட்ட விபத்தில் சாரதிக்கு உதவி செய்ய சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் பரிதாபமான உயிரிழந்துள்ளார். ஒட்டோவா நகரில் உள்ள Smiths நீர்வீழ்ச்சிக்கு அருகில் விபத்துக்குள்ளாகியிருந்த சாரதி ஒருவருக்கு உதவி செய்ய சென்ற நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

Smiths நீர்வீழ்ச்சிக்கு அருகில் வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்த சாரதிக்கு உதவ சென்ற வேளையில் இரும்பு கம்பத்தில் மோதுண்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் நெடுஞ்சாலை வீதியில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுரேந்திரன் தம்பிராஜா  என்ற 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என ஒன்டாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பிராஜா விபத்து இடம்பெற்ற வீதியில் பயணித்துள்ளார். இதன் போது விபத்தை அவதானித்து அவர் வாகனத்தை நிறுத்தியுள்ளார். காயமடைந்திருந்த சாரதி ஒருவருக்கு உதவ முயன்ற போதே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் விபத்துக்குள்ளாகி காயமடைந்திருந்த சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்தில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட 3 வாகனங்கள் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ், யாழ்ப்பாணம் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post