மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தொடர்பில் வெளியான தகவல்!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை தொடக்கம் முழுமையாக மீள ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

சுகாதாரத் துறை வழங்கிய சுகாதார அறிவுறுத்தல்களின் படி, பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

“பேருந்துகளில் உள்ள ஆசனங்களுக்கு அமைய முழுமையான அனுமதி வழங்கப்படும். இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையினால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படும். இது குறித்து பொலிஸ் மற்றும் போக்குவரத்து ஆணைக்குழு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும். எனினும் கொழும்பிலிருந்து நாளைமறுதினம் 26ஆம் திகதி பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படமாட்டாது” என்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரா தெரிவித்தார்.
Previous Post Next Post