யாழ்.அரியாலையில் இளைஞன் திடீர் கைது!

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக யாழ்ப்பணம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அரியாலைப் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடமிருந்து 410 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post