
இந்த தாக்குதலுடன் தொடர்புடையவா்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து போ் நேற்று இரவு யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து வாள்கள் 2, கைக்கோடாரி 1, மோட்டார் சைக்கிள் 2, முச்சக்கர வண்டி 1 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அளவெட்டியில் இயங்கிய கனி என்ற குழுவிலிருந்து பிரிந்து, மல்லாகம் பகுதியில் இயங்கிய குழுவினரே நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த குழுவிலிருந்த ஒருவரின் நண்பனுக்கும், குறிப்பிட்ட அரச அலுவலருக்குமிடையில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டையடுத்து, அதற்கு பழிவாங்கவே வாள்வெட்டு தாக்கதல் நடத்தியதாகவும் கைது செய்யப்பட்டவா்கள் வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.