
உடுத்துறை கடற்பகுதியில் நேற்று இரவு வெளிமாவட்ட மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்று 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் வெளிமாவட்ட மீனவர்களால் சட்டத்திற்கு மாறாக கடற்றொழில் ஈடுபடுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து வெளிமாவட்ட மீனவர்கள் 10 பேரைக் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து இரு படகுகள், சிலின்டர்களை என்பவற்றை கைப்பற்றியுள்ளனா்.
கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.