
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டை , கொலையில் முடிந்திருக்கிறது.
செங்கலடி பாடசாலையொன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும், செங்கலடியை சேர்ந்த மாணவனுக்கு, அதே பாடசாலையில் கற்கும் கொம்மாதுறையை சேர்ந்த மாணவன் தாக்கியதால் காயமடைந்த நிலையில் செங்கலடியை சேர்ந்த மாணவன், வீடு சென்று நடந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து, காயமடைந்த மாணவனின் உறவினர்கள் இருவர் இம்மாணவனை அழைத்துக் கொண்டு இரவு (22) 08.30 மணியளவில் கொம்மாதுறைக்கு சென்று, ஏன் இவனை தாக்கினீர்கள் என விடயத்தை கேட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் கொம்மாதுறையை சேர்ந்த சம்பந்தப்பட்டவர்களால் இவர்கள் தாக்கப்பட்டு வாள் வெட்டுக்கும் உள்ளாகியுள்ளனர்.
பாரிய வாள் வெட்டுக்குள்ளான செங்கலடியை சேர்ந்த மாணவன் ரமணன் திவ்வியநாதன் (14) சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இம் மாணவனின் உறவினர்களான சசிகுமார் மற்றும் பிரேமநாதன் ஆகிய இருவரும் பாரிய வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவத்தை அறிந்த ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று விசாரனைகளை மேற்கொண்டு, மாணவனின் சடலத்தை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும், காயங்களுக்குள்ளானவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.
கொலைக்கு காரணமானவர்கள் தப்பிச்சென்றுள்ள போதும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக வாள், ஏறாவூர் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
மேலதிக விசாரனைகளை ஏறாவூர் குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.