
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சங்கானை விழிசிட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது.
சங்கானை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உதயகுமார் சுரேஷ்குமார் (வயது-32) என்பவரே உயிரிழந்தார்.
மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.