
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இத்தகவலை பிராந்திய சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இச்சம்பவம் Orléans நகரில் இடம்பெற்றுள்ளது. திருமணம் ஓகஸ்ட் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது. திருமணத்தில் 250 பேர் வரை கலந்துகொண்டிருந்தனர். சமூக இடைவெளி, சுகாதார நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் இடம்பெற்ற இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களில் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Centre-Val de Loire மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இலவச கொரோனா பரிசோதனை நடவடிக்கையின் போது ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது அவர்கள் திருமணத்தில் கலந்துகொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் பின்னரே திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இத்திருமணம் தொடர்பாக மொத்தம் 50 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.