வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வாகனங்களுக்கு புகை சான்றிதழை கட்டாயமில்லை என பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று வாகன ஒழுங்குமுறை, பேருந்து சேவைகள், போக்குவரத்து, ரயில்வே மற்றும் மோட்டார் கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், வாகனங்களுக்கான வரிச் சான்றிதழைப் பெறும்போது புகை சான்றிதழை வழங்குவதற்குப் பதிலாக, வாகனம் ஓட்டும் போது சாரதிகள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையைக் கொண்டுவதற்காக விதிகளைத் திருத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம கூறினார்.

புகை சான்றிதழ்களைப் பெறுவதில் பல்வேறு முறைகேடுகளைத் தடுக்கவும், வாகனங்களின் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கவும் இந்த திட்டத்தை செயல்படுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Previous Post Next Post