
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அந்தவகையில் தற்போது பிரான்ஸ் நாட்டை மீண்டும் குறி வைத்துத் தாக்க ஆரம்பித்திருக்கும் இக் கொரோனாவின் பிடிக்குள் நாளாந்தம் ஆயிரக் கணக்கான மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
அதேநேரம் உயிரிழப்புக்களும் நாளாந்தம் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகின்றது. இக் கொரோனாவின் பிடிக்குள் சிக்கி இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தாலும், இக் கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்னும் முற்றுப் பெறவில்லை.
இந் நிலையில் பிரான்ஸ், பரிஸ் நகரம் என்றுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நகரம். இன்று எவ்வித ஆரவாரங்களுமின்றி அநாதையாக்கப்பட்டதாக பரிஸ் வீதிகள் தனித்து விடப்பட்டுள்ளன.
வீதிகளில் மக்கள் நடமாட்டங்களைக் காண முடியாததுள்ளதுடன், தூங்கா நகரம் என அழைக்கப்படும் பரிஸ் நகரம் இன்னும் எழுந்திருக்கவில்லை என்பதே அங்கு வாழும் மக்களின் மனக் கவலையாகவுள்ளது.
இதேவேளை பிரான்ஸ் நாட்டின் பழம்பெரும் கலைக்கூடமான ஒபேரா அக்கடமி பல மாதங்களாக முடப்பட்டுக் கிடக்கின்றது.
இவ் ஒபேரா கலைக்கூடம் எப்போதுமே மக்கள் கூட்டம் நிறைந்ததாகவே காணப்படும். ஆனால் தற்போது மக்கள் கூட்டங்கள் அற்ற ஒரு இடமாக காணப்படுகின்றது.