விபசாரத்தில் ஈடுபட முயற்சித்ததாக ஐந்து பெண்கள் வவுனியாவில் கைது!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
விபசார நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் வைத்தே குறித்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப் பகுதியில் விபசார நடவடிக்கைகள் இடம்பெறுவதாகப் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்த நிலையிலேயே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு, நெடுங்கேணி, விசுவமடு, குருணாகல் பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post