யாழ்.மறை மாவட்ட ஆயர் பணியில் 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் ஞானப்பிரகாசம் ஆண்டகை!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் கலாநிதி பி.ஜே. ஜெபரட்ணம் அடிகளார் மரியன்னை வழி இயேசுவிடம் என்னும் விருதுவாக்குடன் யாழ்ப்பாணம்; மறைமாவட்டத்தின் ஆயராக 5 ஆண்டுகளை 28 நவம்பர் 2020 அன்று நிறைவு செய்யும் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பணி ஆய்வு பற்றி வழங்கிய ஆசிச்செய்தியிலேயே எமது ஆயரின் ஆயத்துவ பணியின் ஐந்து ஆண்டுகள் நிறைவில் கல்வித்துறையில் எமது ஆயர் கொண்டுள்ள ஆழமான அனுபவத்தின் சிறப்பான விளைவுகளை கடந்த ஐந்து வருடங்களில் அனைவராலும் வெகுவாக அவதானிக்கக்கூடியதாகவிருந்தது எனத் தெரிவித்தார்.

அவர் தனது செய்தியில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் ஆயராக தனது பணி வாழ்வின் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் எமது அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு யாழ் மறைமாவட்ட குருக்கள் துறவியர் இறைமக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.

அவர் தனது தொடர் செய்தியில் ஆன்மீக வாழ்விலும் சமூக வளர்ச்சியிலும் கல்வி உயர்விலும் மக்களின் விடுதலை வாழ்விலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக எமது ஆயர் ஆற்றிய சிறப்பான பணிகளை இவ்வேளையில் நன்றியோடு நினைவுகூருவது எமது கடமையாகும்.

தான் ஆயராக பொறுப்பேற்றவுடன் முதற் செயற்பாடாக அவர் கூட்டிய மேய்ப்புப்பணி மாநாடு வழியாக இறைமக்களின் ஆன்மீக வாழ்வின் குறை நிறைகளை ஆராய்ந்து விசுவாச வளரச்சிக்குத் தடையானவற்றி அகற்றி நம்பிக்கை வாழ்வில் அனைவரும் சாட்சிகளாக வாழ அனைவருக்கும் வழிகாட்டினார். அந்த மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்களை பல சவால்கள் மத்தியிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக துணிவுடன் நிறைவேற்றி வருகின்றார்.

போர்க்காலத்தில் அழிந்துபோன எத்தனையோ ஆலயங்கள் மற்றும் பங்குமனைகள் இன்று புதிதாக அல்லது புதுப்பொலிவாக காட்சி தருகின்றமைக்கு காரணமாக இருந்து தனது முழுமையான பங்களிப்பினால் எமது ஆயர் மக்களின் விசுவாச வாழ்வுக்கு வழங்கிய இக்கொடைகளுக்காக எமது இதய நன்றிகளைக் கூறுகின்றோம். தனது ஐந்தாவது ஆண்டு நிறைவில் கொழும்புத்துறையில் அழிவுக்குள்ளான முதியோர் மடத்தைப் புதிதாகக் கட்டி திறந்து வைக்கும் செயல் குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். அவருடைய ஐந்துவருட பணிவாழ்வின் பூர்த்தியின் பரிசாகும்.

கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமன்றி மத வேறுபாடுகளின்றி எல்லா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எண்ணம் கொண்டவராக மக்களின் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் எமது ஆயரின் பங்களிப்பு குறிப்பிடக்கூடியதொன்றாகும். எமது மறைமாவட்டத்தின் மனித முன்னேற்ற நிலையத்தினூடாக எமது மறைமாவட்டத்தில் தேவைகளோடு வாழும் மக்களுக்கும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தேசிய சமூக முன்னேற்ற நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் இலங்கை முழுவதிலுமுள்ள ஏழை மக்களுக்கும் எமது ஆயர் அவர்கள் ஆற்றும் பரந்துபட்ட பணி பாராட்டுதற்குரியதாகும்.

கல்வித்துறையில் எமது ஆயர் கொண்டுள்ள ஆழமான அனுபவத்தின் சிறப்பான விளைவுகளை கடந்த ஐந்து வருடங்களில் அனைவராலும் வெகுவாக அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. கல்வியில் பின்தங்கிய பாடசாலைகளை இனங்கண்டு அங்கு குருக்கள் துறவிகளைப் பணியாற்ற அழைத்து மாணவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் காண வழிவகுத்த பெருமை எமது ஆயரையே சாரும்.

தனது ஆளுமையையும் ஏனைய சமூக அரசியல் தலைவர்களுடனான பரஸ்பர நல்லெண்ணத்தையும் மக்களுடைய விடுதலை வாழ்வின் பணிகளுக்காக பயன்படுத்தி குறிப்பாக தமிழ் மக்கள் அனுபவிக்கும் பல்வேறு அடக்குமுறைகளின் அநீதித்தன்மையை தலைவர்களுக்கு உணர்த்தி அவர்கள் தமது செயற்பாடுகளை திருத்தி அமைக்க தன்னுடைய பொறுப்புவாய்ந்த பங்களிப்பை எமது ஆயர் அவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் சிறப்பாக வழங்கி அர்ப்பணித்துச் செயற்பட்டதற்காகவும் எமது நன்றிகளைக் கூறி நிற்கின்றோம்.

கொரோனா வைரசின்; தீமை நிறைந்த இக்காலத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கும் மக்களின் ஆன்மீகத் தலைவராக இருந்து மக்களை ஆற்றுப்டுத்தும் பணியை ஆற்றிக் கொண்டிருக்கும் எமது ஆயருக்கு எமது நன்றிகளைக் கூறும் நாம் ஆயர் அவர்கள் மேலும் பல்லாண்டுகள் நிறைவான உடல் உள நலத்தோடு அமைதியுடன் வாழ இறை சித்தத்திற்கேற்ப பணியாற்ற இறை ஆசீர் வேண்டிநிற்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post