மண்டைதீவு திடுதிருக்கை ஞான வைரவர் ஆலயத்தில் மழை வேண்டி விசேட பிரார்த்தனை! (வீடியோ)



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மண்டைதீவு திடுதிருக்கை ஞான வைரவர் ஆலயத்தில் இன்றைய தினம் (01.11.2020) மழை வேண்டி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.

இவ் வருடம் அப் பகுதி விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை மழை இன்மையால், அழிவடையும் அபாய நிலையில் உள்ளது.

இதனால் அப் பகுதியில் மழை பெய்ய வேண்டும் என வைரவப் பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.

இதேவேளை மண்டைதீவுப் பகுதியில் பெரும்பாலான வயல்களில் அதிகளவான விவசாயிகள் இம்முறை நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இருந்தும் மழை பெய்யாத காரணத்தினால் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதுடன், இனிவரும் நாட்களிலும் மழை இன்மை தொடருமாக இருந்தால் அப் பகுதி விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்க வேண்டி வரும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Previous Post Next Post