பற்றி எரிந்த வர்த்தக நிலையங்கள்! தீயில் கருகி உரிமையாளர் உயிரிழப்பு!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில்  29.04.2021 அன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்ததோடு மேலும் ஒரு கடை பகுதியளவில் சேதமடைந்தது.

இந்நிலையில் முற்றாக எரிந்த ஒரு கடையின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த தீவிபத்தின் போது முத்துஐயன்கட்டினனை சேர்ந்த 72 வயதுடைய செல்லப்பா அரிராசசிங்கம் என்பவரே உயிரிழந்தவர் ஆவார். 

உயிரிழந்த நபர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒட்டுசுடுட்டான் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Previous Post Next Post