மூன்று நாட்களுக்கு இ.போ.ச. பேருந்துச் சேவைகள் இடைநிறுத்தம்!


நாடுமுழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் வரும் மே 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பேருந்து சேவைகள் நடைபெறாது என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன் உதவிப் பொது முகாமையாளர் தவானா பாண்டுக ஸ்வர்ணஹன்ச இதனைத் தெரிவித்தார்.

“நாளை ஒரு விடுமுறை நாளாக இருக்கும் என்றும், பயணம் தடைசெய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து தேவையில்லை என்றும் அவர் கருதினார்.

இருப்பினும், அத்தியாவசிய கடமைகளைச் செய்ய வரும் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கு பேருந்து சேவைகள் வழங்கப்படும்” என்றும் அவர் கூறினார்.
Previous Post Next Post