பயணத் தடை காலத்தில் கடைகள் அனைத்தும் பூட்டு! மக்களும் வீட்டை விட்டு வெளியேற முடியாது!!


இன்று வியாழக்கிழமை (மே 13) இரவு 11 மணி முதல் வரும் மே 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் பயணக் கட்டுப்பாட்டின் கீழ் அடையாள அட்டை எண்ணின் கீழ் வீட்டை விட்டு வெளியேற முடியாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஒரு குறிப்பிட்ட மருத்துவ சேவைக்கும் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்ல முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, இன்று இரவு 11 மணி தொடக்கம் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ சிகிச்சைக்கான மருந்துகளைப் பெற முடியும் என்று குறிப்பிட்டார்.
Previous Post Next Post