கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராக தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தால் இரண்டு முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு தொற்றுநோயியல் மற்றும் கோவிட்-19 கட்டுப்படுத்தல் இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அறிவுறுத்தியுள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“அத்தியாவசியமற்ற பயணங்களைக் கட்டுப்படுத்தி வீட்டிற்குள் இருப்பதன் மூலம் கோரோனா ஒழிப்பு திட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் எதிர்காலத்தில் நாடு மூடப்படலாம்” என்றும் மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.