வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார் விபத்து! இருவர் உயிரிழப்பு!! (படங்கள்)

மட்டக்களப்பில் இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் இன்று அதிகாலை வேகக் கட்டுப்பாட்டையிழந்து இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தனியார் பேருந்து உரிமையாளர் பரமேஸ்வரன் தனுஜன் மற்றும் வினோகா துரைசிங்கம் (வயது-31) என்ற இருவருமே உயிரிழந்தனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை விபத்தில் உயிரிழந்த பெண் சமூக வலைத்தளப் பிரபலமும் பிரபல அறிவிப்பாளருமான திருமதி மேனகா சந்துருவின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் நிமித்தம் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்றுகொண்டிருந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post