பாடசாலைகள், தனியார் வகுப்புகள் காலவரையறையின்றி மூடப்படுகின்றன!


நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பாடசாலைகள், முன்பள்ளிகள், தனியார் கல்வி வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் தொடங்குவது குறித்து 03 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் காரணமாக பாடசாலைகளுக்கு இன்று வரை சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது மறு அறிவித்தல் வரை பாடசாலைகள், முன்பள்ளிகள் தனியார் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
Previous Post Next Post