யாழில் வீடு புகுந்து இளம் பெண்ணை மிரட்டி ஏரிஎம் காட் பறிப்பு! இளைஞன் கைது!!

வீடொன்றினுள் புகுந்து , பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் , வீட்டில் தனிமையில் இருந்த யுவதியை மிரட்டி , அவரிடம் இருந்த வங்கி அட்டையை திருடி சென்றுள்ளார்.

அது தொடர்பில் யுவதியினால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிராகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை ,

திருடப்பட்ட வங்கி அட்டையை பயன்படுத்தி , பல்பொருள் அங்காடி ஒன்றில் இளைஞன் பொருட்களை கொள்வனவு செய்ததை அறிந்து , விசாரணைகளை முன்னெடுத்து இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post