பிரான்ஸ் பாரிஸ் நகரில் மிக முக்கியமான நிலக் கீழ் தொடருந்து நிலையத்தின் (Bibliothèque François Mitterrand) படிக் கட்டுகளில் தமிழ் மொழியும் கல்வெட்டாகப் பதிக்கப்பட்டுள்ளது.
உலகில் பழமை வாய்ந்த ஐந்து மொழிகளில் தமிழ் மொழியையும் இணைத்து இவ்வாறு பதிக்கப்பட்டுள்ளது தமிழ் மொழியின் பெருமையை எடுத்துரைத்துள்ளது.
எனவே பிரான்ஸில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை இவ்விடத்திற்கு அழைத்துச் சென்று எம் மொழியையும், எம் இனத்தின் பெருமைகளையும் கற்றுக் கொடுப்பது காலத்தின் தேவையாகவுள்ளது.