யாழ்.நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமையினை தவிர்ப்பதற்காகவே இராணுவத்தினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் சன நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் வீதிகளில் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணியினரும் கண்காணிப்பு மற்றும் ரோத்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
குறித்த நடவடிக்கையானது யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் யாழ்.நகரப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நடவடிக்கையானது யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் நெறிப்படுத்தலில் யாழ்.நகரப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.