
ஒஸ்திரியா நாட்டில் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தின் அயல் நாடுகளில் ஒன்றான ஒஸ்திரியா நாட்டில் நேற்று(18) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் குடும்பத்துடன் புலம் பெயர்ந்து ஒஸ்திரியா நாட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவதினம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்து சம்பவம் இடம்பெற்றது.
குறித்த போராளி முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையே ஆவார்.