வவுனியா - கொக்குவெளி, மகாறம்பைக்குளம், அரசடி வீதியில் வசிக்கும் குடும்பப் பெண் ஒருவரை காணவில்லை என அவரது தாயாரால் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த பெண் கொக்குவெளி மகாறம்பைக்குளம் அரசடி வீதியில் வசிக்கும் 22 வயதான கண்ணன் வினித்தா என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் நேற்று முன்தினம் (04)ம் திகதி மாலை 6 மணியளவில் தனது அம்மாவின் வீட்டிலிருந்து அருகாமையில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் பல மணி நேரங்கள் தாமதமாகியும் குறித்த பெண் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து, உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கும் தொடர்பு விசாரித்துள்ளனர். இதையடுத்து நேற்று (05) வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குறித்த குடும்பப் பெண் திருமணம் முடித்து ஐந்து வருடங்களாகவதுடன், சில நாட்களாக கணவரை பிரிந்து தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற்றால் வவுனியா பொலிசாருக்கோ அல்லது 0765462984 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு அவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

