
சம்பவத்தில் இந்திரம்மன் கோயிலடி துன்னாலை கரவெட்டியைச் சேர்ந்த சிவராசா வனஜா (வயது 43) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
நேற்று முன்தினம் உணவருந்தியபோது வாந்தி எடுத்துள்ளார். இருந்தும் அது தொடர்பில் கவனம் செலுத்தாது இருந்துள்ளார்.
இந் நிலையில் நேற்று தேநீர் அருந்திய பின்னர் அவரின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட, உடனடியாக பருத்தித்துறை வைத்தியசாலைக்கு அவரைக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
