
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா - 1 ஆம் ஒழுங்கை - மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த சற்குணசிங்கம் தமிழினி வயது 32 மற்றும் பிள்ளைகளான டனிஸ்கா வயது 5, கனிஸ்கா வயது 4 என்ற தனது மனைவியும், இரு பிள்ளைகளும் கடந்த 2021.08.10 ஆம் திகதி வீட்டில் இருந்துள்ளனர். கணவர் அன்று காலை கடையொன்றிற்கு வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய போது வீட்டில் மனைவி பிள்ளைகளை காணவில்லை என கணவனால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுமேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காணாமல் போன பெண் மற்றும் பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 0777111103 - 0775945839

