யாழில் கடலுக்கு குளிக்கச் சென்ற நபர் சடலமாக மீட்பு! (படங்கள்)

கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்கு குளிக்கச் சென்ற இவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் காலை 8.30 மணியளவில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியை சேர்ந்த மனுவேல் செபஸ்டியன் என்கிற வயது 65 வயதான முதியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post