யாழ்ப்பாணத்தில் 2 பூட் சிற்றிகளில் திருடியவர் சிக்கினர்! (சிசிரிவி காட்சிகள்)


யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்று வெளிநாட்டு சொக்லேட்டுகள் மற்றும் சம்போக்களைத் திருடியவர் சில மணி நேரங்களிலேயே பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளில் (Food City)இன்று காலை சம்பவம் இடம்பெற்ற நிலையில் சிசிரிவி காணொளிப் பதிவை வைத்து சந்தேக நபர் நண்பகல் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டார்.

அவர் இரண்டு பல்பொருள் அங்காடிகளுக்கு இன்று காலை சென்று தலா 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சொக்லேட்டுகள் மற்றும் சம்போக்களை திருடி ஆடைக்குள் மறைத்து வெளியேறியமை சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்துக்குச் சென்று சிசிரிவி காணொளி பதிவுகளைப் பார்வையிட்ட யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சில மணிநேரத்துக்குள் சந்தேக நபரைக் கைது செய்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post